by Vignesh Perumal on | 2025-07-20 06:35 PM
பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) அதிரடி நடவடிக்கையாக, கட்சியின் விதிகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு மூத்த வழக்கறிஞர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பாமக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக தலைமை இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, பின்வரும் நான்கு பேர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, சிவக்குமார் (சட்டமன்ற உறுப்பினர்), சதாசிவம் (சட்டமன்ற உறுப்பினர்), வெங்கடேஸ்வரன் (சட்டமன்ற உறுப்பினர்), பாலு (வழக்கறிஞர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகி) ஆகிய நான்கு பேரும் கட்சியின் அடிப்படை விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் மீறி இவர்கள் செயல்பட்டதாகப் பாமக தலைமை குற்றம் சாட்டியுள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்ட இந்த நான்கு பேர் மீதும் விசாரணை நடத்துவதற்காக ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை அழைத்து, அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்கும் முழு அதிகாரத்தையும் பாமக தலைமை வழங்கியுள்ளது. விசாரணையின் முடிவில், அவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியில் இத்தகைய உயர்மட்ட நிர்வாகிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, பாமகவின் உட்கட்சி ஒழுங்கை நிலைநிறுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.