by Vignesh Perumal on | 2025-07-18 08:09 PM
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த பூசாரிபட்டியைச் சேர்ந்த தெய்வேந்திரன் (37) என்பவர், தான் ஓட்டி வந்த டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் துயரச் சம்பவம், வத்தலகுண்டு - நிலக்கோட்டை நெடுஞ்சாலையில் இன்று (ஜூலை 18, 2025) மாலை நிகழ்ந்தது. தெய்வேந்திரன் தனது டிராக்டரில் ஜல்லிக் கற்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் இருந்த வேகத்தடையை கடக்க முயன்றபோது, டிராக்டர் பலமாக குலுங்கியது. இதில் நிலைகுலைந்த தெய்வேந்திரன், டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். எதிர்பாராதவிதமாக, டிராக்டரின் பின்பக்க டயர் அவரது தலையில் ஏறியது.
இந்த விபத்தில், தெய்வேந்திரன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.