| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

விழிப்புணர்வு பேரணி...! கலெக்டர் பங்கேற்பு....!

by Vignesh Perumal on | 2025-07-11 12:23 PM

Share:


விழிப்புணர்வு பேரணி...! கலெக்டர் பங்கேற்பு....!

திண்டுக்கல் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதார துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தினம்(ஜூலை 11) முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

1987-ம் ஆண்டு, ஜூலை மாதம் 11-ம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. பெருகி வரும் மக்கள் தொகை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நாள் உலக மக்கள் தொகை தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் குடும்ப நலத்திட்டம் 1956-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல துறைகளின் கூட்டு முயற்சியால் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டின் வளர்ச்சிக்கும், நமது பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்கும் அடிப்படையாக அமையும் மக்கள்தொகை பெருக்கத்தினை கருத்தில் கொண்டு, அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

முக்கியமாக களப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களின் விபரங்களின் அடிப்படையில் அந்தப்பகுதிகளில் தீவிரமாக களப்பணி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அதிக குழந்தைகள் இருப்பதனால் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பற்றி களப்பணியாளர்கள் விரிவாக எடுத்துரைக்க வேண்டும். அரசு சார்பில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மூலம், பொதுமக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கும், தாங்களாகவே முன்வந்து சமூகத்தின் நலன் கருதி செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இப்பேரணியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், ஜீ.டி.என் கல்லூரி செவிலியர் பயிற்சி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ”ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு திட்டமிட்ட பொற்றோருக்கான அடையாளம்” மற்றும் ”உடலும் மனதும் பக்குவமடைந்து உறுதியாகும் வயது 21 அதுவே பெண்ணுக்கு - திருமணத்திற்கும் தாய்மை அமைவதற்கும் உகந்த வயது” குறித்த விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி சென்றனர். விழிப்புணர்வு பேரணி பூமார்கெட், காமராஜர் சிலை வழியாக சென்று அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகில் நிறைவடைந்தது.


தொடர்ந்து, குடும்ப கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வு கையேட்டினை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் மரு.கௌசல்யா, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சுகந்தி ராஜகுமாரி, நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment