| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் கோயம்புத்தூர்

திமுக ஆர்ப்பாட்டம்...! ஜூலை 14-ல் கண்டனம்..! திடீர் அறிவிப்பு....!

by Vignesh Perumal on | 2025-07-11 12:04 PM

Share:


திமுக ஆர்ப்பாட்டம்...! ஜூலை 14-ல் கண்டனம்..! திடீர் அறிவிப்பு....!

மாணவர்களின் உயர்கல்வி குறித்து கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்)-ஐ கண்டித்து, திமுக மாணவர் அணி சார்பில் வரும் ஜூலை 14 ஆம் தேதி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி அறிவித்துள்ளார்.

சமீபத்தில் கோவைப் பகுதியில் நடைபெற்ற அதிமுகவின் "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" எழுச்சிப் பயணத்தின் போது, ஈபிஎஸ், "கோவில் நிதியைப் பயன்படுத்தி கல்லூரிகள் கட்டுவது தவறு. பக்தர்களின் காணிக்கைகள் கோவிலின் வளர்ச்சிக்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும். கல்லூரிகளைக் கட்ட அரசு தன் சொந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும்" என்று விமர்சித்திருந்தார். அவரது இந்தக் கருத்து, திமுக மற்றும் பொதுமக்களிடையே பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது

ஈபிஎஸ்-ஸின் இந்தக் கருத்துக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கோவில் நிதியை கல்வி, மருத்துவப் பணிகளுக்கும் பயன்படுத்தலாம் என்று சட்டத்திலேயே இடம் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். பக்திவேதாச்சலம், காமராஜர், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியிலும் கோவில் நிதியில் இருந்து கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக திமுக தரப்பு வாதிடுகிறது.

கல்விக்காகத் திராவிட மாடல் அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஈபிஎஸ் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசியதைக் கண்டித்து, திமுக மாணவர் அணி தற்போது கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி வெளியிட்ட அறிக்கையில், "திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி ஏழை, எளிய, சாமானிய மாணவர்களுக்கு உயர்கல்வி பெற கல்லூரிகளைத் திறந்து வைத்ததை, 'கல்லூரிகளைத் திறப்பது சதிச்செயல்' எனப் பேசிய ஈபிஎஸ்-ஐ கண்டித்து, ஜூலை 14 ஆம் தேதி, பிற்பகல் 2.30 மணி அளவில், கோவை, டாடாபாத், சிவானந்தா காலனியில், எனது (ராஜீவ் காந்தி) தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு ராஜீவ் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டம், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.





நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment