by Vignesh Perumal on | 2025-07-10 11:05 AM
சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாகக் கூறி, தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி, பிரனிதா, ஸ்ரீமுகி, வர்ஷினி, வசந்தி கிருஷ்ணன் உள்ளிட்ட மொத்தம் 29 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தெலுங்குத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக, பல்வேறு சூதாட்ட செயலிகள் இணையத்தில் பரவலாகி வருகின்றன. இந்தப் செயலிகளை பிரபலங்கள் விளம்பரப்படுத்துவது இளைஞர்கள் மத்தியில் சூதாட்ட மோகத்தை அதிகரிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சூதாட்டம் சட்டவிரோதமானது என்பதால், இந்தச் செயலிகளை விளம்பரப்படுத்துவதும் சட்டவிரோதச் செயலாகக் கருதப்படுகிறது.
இதன் அடிப்படையில், சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தி, மக்களைத் தவறாக வழிநடத்தியதாகக் கூறி, சம்பந்தப்பட்ட 29 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, இதுபோன்ற செயலிகளுக்குப் பிரபலங்கள் விளம்பரம் செய்வதைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா ஆகிய நடிகர்கள் மற்றும் நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி, பிரனிதா, ஸ்ரீமுகி, வர்ஷினி, வசந்தி கிருஷ்ணன் ஆகிய நடிகைகள் மற்றும் மேலும் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. சம்பந்தப்பட்ட பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.