by Vignesh Perumal on | 2025-07-10 10:57 AM
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 10) மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.160 உயர்ந்து, ரூ.72,160க்கு விற்பனையாகிறது.
மேலும், 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 9,020 (நேற்று ரூ. 9,000) - கிராமுக்கு ரூ. 20 உயர்ந்துள்ளது.
ஒரு சவரன் (8 கிராம்) ரூ. 72,160 (நேற்று ரூ. 72,000) - சவரனுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, 24 காரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ. 9,848 (நேற்று ரூ. 9,826) - கிராமுக்கு ரூ. 22 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) ரூ. 78,784 (நேற்று ரூ. 78,608) சவரனுக்கு ரூ. 176 உயர்ந்துள்ளது.
இருப்பினும் இன்றைய நிலவரப்படி, வெள்ளி விலையில் பெரிய மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120 என்ற விலையிலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000 என்ற விலையிலும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்படும் மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு, மத்திய வங்கிகளின் கொள்கைகள், பொருளாதார நிலவரம் போன்ற பல்வேறு காரணிகள் உள்நாட்டு விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.