by admin on | 2025-07-08 03:36 PM
*தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் மதுரை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா!*தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் மதுரை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.சரவணன் அலுவகத்தை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர்கள் பி.ராஜன், என்.அறிவழகன், மாநில அமைப்பு செயலாளர்கள் நெல்லை கலைமணி, பி.முகுந்தன் மற்றும் ஊராட்சி உதயம் ஆசிரியர் ஜோதி, நிர்வாக ஆசிரியர் விஜயபாண்டி, புதிய சகாப்தம் முருகானந்தம், அருண் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.சரவணன் பேசியதாவது, சங்கத்தின் வளர்ச்சி, செயல்பாடுகள் மற்றும் முன்னெடுப்புகள், பத்திரியைாளர்கள் நலன் மற்றும் அரசின் சலுகைகள் குறித்து பேசினார். மேலும் பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும், பத்திரிகையாளர்களுக்கு சங்கம் என்றும் உறுதுணையாக நிற்கும் என்றும் கூறினார்.
மாவட்ட பொருளாளர் கவிதா, மாவட்ட துணைத் தலைவர்கள் பிரேம்சங்கர், பாலா, சுரேஷ்பாபு, மாவட்ட இணைச்செயலாளர்கள் கார்த்திக், மணிகண்டராஜா, கெளரவ ஆலோசகர்கள் பாலமுருகன், அருள்ஜோதி, செளகத்அலி, செய்தி தொடர்பாளர் மாணிக்கம் உள்ளிட்ட மதுரை மாவட்ட நிர்வாகிகள் விழாவை சிறப்பாக முன்னின்று நடத்தினர்.
மாலை தீபம் நாளிதழ் மதுரை மாவட்ட செய்தியாளர் ரமேஷ், வீரத்தலைமுறை தூண்டி கருப்பணன், விஜய் மற்றும் பத்திரிகையாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், அறக்கட்டறை நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் மரகன்றுகள் வழங்கப்பட்டது.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர் மற்றும் தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் தேனி. 9842337244