by Vignesh Perumal on | 2025-07-08 12:18 PM
சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் சற்று மாறுதலுடன் காணப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.
அதாவது, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 9,060 (நேற்று ரூ. 9,010) - கிராமுக்கு ரூ. 50 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) ரூ. 72,480 (நேற்று ரூ. 72,080) சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது. மேலும், 24 காரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ. 9,884 (நேற்று ரூ. 9,829) - கிராமுக்கு ரூ. 55 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) ரூ. 79,072 (நேற்று ரூ. 78,632) - சவரனுக்கு ரூ. 440 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (ஜூலை 8, 2025) வெள்ளி விலை நிலவரம், ஒரு கிராம் ரூ. 120 (நேற்று ரூ. 120) - மாற்றமில்லை. ஒரு கிலோ ரூ. 1,20,000 (நேற்று ரூ. 1,20,000) - மாற்றமில்லை. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு, உலகப் பொருளாதார நிகழ்வுகள் போன்ற காரணிகள் தங்கம் மற்றும் வெள்ளி விலையை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.