| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி...!

by Vignesh Perumal on | 2025-04-29 07:38 PM

Share:


உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி...!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த நிலையில், அம்மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள தேவேந்திர ஃபட்னவிஸ், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "பஹல்காம் தாக்குதலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மேலும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்" என்றார்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் அரசும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ள இந்த நிதியுதவி மற்றும் அரசு வேலை வாய்ப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஓரளவு ஆறுதலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment