| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

போட்டித் தேர்வு மாணவர்களுக்கு...! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு...!

by Vignesh Perumal on | 2025-04-28 01:12 PM

Share:


போட்டித் தேர்வு மாணவர்களுக்கு...! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு...!

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை : 07/2025, நாள்:25.04.2025 வாயிலாக கிராம நிர்வாக அலுவலர் / இளநிலை உதவியாளர் /தட்டச்சர் / சுருக்கெழுத்துத் தட்டச்சர் உள்ளடக்கிய 3935 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே இக்காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு நேரடி இலவச ப் பயிற்சி வகுப்புகள் இவ்வலுவலக வளாகத்தில் 02.05.2025 அன்று முதல் துவங்கப்படவுள்ளன. இப்பயிற்சியானது திறன்மிக்க வல்லுநர்களால் மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளது. 


எனவே, போட்டித் தேர்விற்குத் தயாராகும் வேலைநாடுநர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment