by Vignesh Perumal on | 2025-04-28 12:06 PM
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒன்பது முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புகள் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 28, 2025) 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகளில் கூறியிருப்பதாவது:
1. பண்டிகை கால முன்பணம் உயர்வு: அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000-ஆக உயர்த்தப்படும்.
2. ஈட்டிய விடுப்பு பணப்பலன்: அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கான பணப்பலன் இந்த ஆண்டே வழங்கப்படும். 2025 அக்டோபர் 1-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறலாம்.
3. அகவிலைப்படி உயர்வு: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படும்.
4. ஓய்வூதியம் குறித்த ஆய்வு: மூன்று வகையான ஓய்வூதியங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு செப்டம்பர் மாதம் அறிக்கை அளிக்கும்.
5. கல்வி முன்பணம்: அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி படிப்பிற்காக ரூ.1 லட்சமும், கலை அறிவியல் படிப்பிற்கு ரூ.50 ஆயிரமும் முன்பணமாக வழங்கப்படும்.
6. திருமண முன்பணம் உயர்வு: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் தேவைக்கேற்ப திருமண முன்பணம் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
7. பொங்கல் போனஸ் உயர்வு: பொங்கல் போனஸ் ரூ.500-ல் இருந்து ரூ.1,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
8. ஓய்வூதியர் பண்டிகை முன்பணம் உயர்வு: ஓய்வூதியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-ல் இருந்து ரூ.6,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
9. மகப்பேறு விடுப்பு கணக்கீடு: பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த அறிவிப்புகள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, பண்டிகை கால முன்பணம் உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்பு பணப்பலன் உடனடியாக கிடைக்கும் என்பதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கல்வி மற்றும் திருமண முன்பண உயர்வு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு பதவி உயர்வுக்கு கணக்கில் கொள்ளப்படும் என்ற அறிவிப்பு பெண் ஊழியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதலமைச்சரின் இந்த அறிவிப்புகளுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன. இந்த அறிவிப்புகள் அரசு ஊழியர்களின் நலன்கள் அதிகரிக்கும் என்றும், அவர்கள் இன்னும் சிறப்பாக பணியாற்ற ஊக்கமளிக்கும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!