| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் Spiritual

இன்றைய கோபுர தரிசனம்...!

by Vignesh Perumal on | 2025-04-28 08:45 AM

Share:


இன்றைய கோபுர தரிசனம்...!

அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் பண்பொழி

அமைவிடம்: தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற இடத்தில் இக்கோயில் உள்ளது. கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில், இந்தக் கோவில் அமைந்துள்ளது. சுரண்டையில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இறைவன்: இக்கோயிலில் மூலவராக முருகன் உள்ளார். மூலவரை திருமலைக் குமாரசாமி என்றும், குமாரசாமி என்றும் அழைக்கின்றனர். மலைமீது திருமலைக்காளி உள்ளார். 

தல வரலாறு: புளியமரத்தடியில் உள்ள வேல் முன் காலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. இங்கு பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளியமரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி, "பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாரும். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்றார். அதன்படியே பந்தளத்தை ஆண்ட அரசருக்கு தகவல் தெரிவித்த பூவன்பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார் என்பது செய்தி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment