by Vignesh Perumal on | 2025-04-27 09:05 PM
தமிழக அமைச்சரவையில் இன்று (ஏப்ரல் 27, 2025) அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி. செந்தில்பாலாஜி மற்றும் வனம் மற்றும் காதி துறை அமைச்சர் டாக்டர்.கே. பொன்முடி ஆகியோரின் ராஜினாமாக்களை ஏற்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பரிந்துரைத்திருந்தார். இந்த பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, சில அமைச்சர்களின் இலாகாக்கள் மற்றும் பொருள் ஒதுக்கீடுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதலமைச்சரின் பரிந்துரைக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மாற்றியமைக்கப்பட்ட இலாகாக்கள் பின்வருமாறு: "திரு. எஸ்.எஸ். சிவசங்கர், தற்போது வகித்து வரும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்புடன் கூடுதலாக மின்சாரத் துறை அமைச்சர் பொறுப்பையும் வகிப்பார். இனி இவர் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
திரு. எஸ். முத்துசாமி, தற்போது வகித்து வரும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பொறுப்புடன் கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பொறுப்பையும் வகிப்பார். இனி இவர் வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தற்போது வகித்து வந்த பால் மற்றும் பால் வளர்ச்சித் துறை அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டு, வனம் மற்றும் காதித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் திரு. டி. மனோ தங்கராஜ் அவர்களை புதிய அமைச்சராக நியமிக்க முதலமைச்சர் பரிந்துரைத்திருந்தார். இந்த பரிந்துரைக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் திரு. டி. மனோ தங்கராஜ் அவர்களின் பதவியேற்பு விழா நாளை (ஏப்ரல் 28, 2025) திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு சென்னை ராஜ்பவனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் மாற்றங்களுக்கான காரணங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், நிர்வாக ரீதியான மாற்றங்கள் மற்றும் அமைச்சர்களின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சர்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட இலாகாக்களைக் கொண்ட அமைச்சர்கள் நாளை பதவியேற்க உள்ளனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!