| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

மனவளக்கலை மன்றம் ஆண்டு விழா....!!!

by Muthukamatchi on | 2025-04-27 04:31 PM

Share:


மனவளக்கலை மன்றம் ஆண்டு விழா....!!!

வாடிப்பட்டி அறிவுத் திருக்கோயில் மனவளக்கலைமன்ற

ஆண்டு விழா..!!!


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மனவளக் கலை அறக்கட்டளை அறிவுத்திருக்கோயில், 27ம் ஆண்டு விழா நடைபெற்றது.வாடிப்பட்டி மனவளக்கலை மன்ற நிர்வாகி மணவாளன் அனைவரையும் வரவேற்றார். மதுரை மண்டல தலைவர் தலைமை வகித்தார். விழாவில் மனவளக் கலை மன்றம் உருவாவதற்கு இடம், மற்றும் பொருள் உதவி வழங்கிய  வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், ஆசிரியர் சீதாராமன்,  கிரட் அழகேசன், குருசாமி, ஜெயச்சந்திரன், மற்றும் பலர் கவுரவிக்கப்பட்டனர். மேலும் விழாவில்பேராசிரியர் ஸ்ரீராம், பேராசிரியை அமுதா ராமனுஜம் ஆகியோர், மனவளக் கலை மன்றம் குறித்தும், உடல் நலம் பேணுதல் குறித்து சிறப்புரை ஆற்றினர். பொருளாளர் அருள்நிதிவெள்ளை நன்றியுரை ஆற்றினார். நிகழ்வின் முடிவில் உலக நல வாழ்த்து வாசிக்கப்பட்டது. பின் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

நிருபர்  பாலராகுல்  வாடிப்பட்டி. மதுரை

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment