| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

உழவாரப்பணிகள் தொடக்கம்...! உலக சிவனடியார்கள் மிகுந்த ஆர்வம்...!

by Vignesh Perumal on | 2025-04-27 11:18 AM

Share:


உழவாரப்பணிகள் தொடக்கம்...! உலக சிவனடியார்கள் மிகுந்த ஆர்வம்...!

நத்தம் அருகே கோவில்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் கோவிலில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் சார்பில் உழவாரப் பணி நடைபெற்றது. இந்த உழவாரப் பணியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் வளாகத்தை தூய்மை செய்தனர்.

உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் ஏற்பாட்டில், தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் உழவாரப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நத்தம் கோவில்பட்டியில் வீற்றிருக்கும் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவிலில் இன்று உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது.

காலை முதலே ஏராளமான சிவனடியார்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். அவர்கள், கோவில் வளாகத்தில் உள்ள புல், பூண்டுகள், குப்பைகள் மற்றும் இதர கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும், கோவிலின் பிரகாரங்கள், மண்டபங்கள் மற்றும் சந்நிதிகளையும் தூய்மைப்படுத்தினர். பக்தர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் உழவாரப்ணியில் ஈடுபட்டனர்.

இந்த உழவாரப் பணியானது, கோவிலின் தூய்மையை பேணுவதுடன், பக்தர்களிடையே தன்னார்வத்தையும், இறைப்பணியின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக அமைந்தது. உழவாரப் பணியில் ஈடுபட்ட அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கைலாசநாதர் கோவில் இப்பகுதியின் முக்கியமான சிவாலயங்களில் ஒன்றாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் இந்த உழவாரப் பணி, கோவிலின் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க பெரிதும் உதவியது என்று பக்தர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற உழவாரப் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment