| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பட்டாசு தொழிற்சாலையில் விபத்து..!! தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பந்தல் ராஜா வேண்டுகோள்..!!

by Muthukamatchi on | 2025-04-26 09:24 PM

Share:


பட்டாசு தொழிற்சாலையில் விபத்து..!! தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பந்தல் ராஜா வேண்டுகோள்..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் எம்.புதுப்பட்டி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக பந்தல் ராஜா ஆழ்ந்த இரங்கல் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம். புதுப்பட்டி பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 3 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். வெடி விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெடி விபத்தால் காயமடைந்து 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைவில் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகிறேன். மேலும், தமிழக அரசு உயிரிழந்தவர்களுக்கு தலா 25 லட்சமும் காயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு  தலா 5 லட்சமும் இழப்பீடாக அறிவிக்க வேண்டும். மேலும் பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக  வேண்டுகிறேன்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment