| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் ADMK

முன்னாள் அமைச்சர் கொலை வழக்கு...! உயர்நீதிமன்றம் மறுப்பு...!

by Vignesh Perumal on | 2025-04-26 05:34 PM

Share:


முன்னாள் அமைச்சர் கொலை வழக்கு...! உயர்நீதிமன்றம் மறுப்பு...!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

2022 பிப்ரவரி 19 ஆம் தேதி, சென்னை மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது, அதிமுக மற்றும் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கள்ள ஓட்டு போட முயன்றதாகக் கூறி, ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, ராயபுரம் காவல் நிலையத்தில் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.

நீதிபதி தனது தீர்ப்பில், "இந்த வழக்கில் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது" என்று குறிப்பிட்டார்.


மேலும், "இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும்" என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பின் மூலம், ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment