| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

கம்பத்தில் நுரையீரல், வயிறு, குடல் இலவச மருத்துவ முகாமால் மக்கள் மகிழ்ச்சி..

by aadhavan on | 2025-04-26 04:55 PM

Share:


கம்பத்தில் நுரையீரல், வயிறு, குடல்  இலவச மருத்துவ முகாமால் மக்கள் மகிழ்ச்சி..

பயனாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை

» சி.எம்.ஆதவன்

தேனி மாவட்டம், கம்பத்தில் நடைபெற்ற நுரையீரல் மற்றும் வயிறு சம்மந்தமான மருத்துவ முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு இலவச பரிசோதனைகள் செய்யப்பட்டன.

கம்பம் பிளஸ்ஆல் அறக்கட்டளை, எக்விடாஸ் டிரஸ்ட், விஸ்வகுல ஐக்கிய சங்கம் மற்றும் தேனி பாரதி என்.ஆர்.டி மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தினர். நுரையீரல் சிறப்பு மருத்துவர் நிரஞ்சன் பிரபாகர், வயிறு மற்றும் குடல் சிறப்பு சிகிச்சை நிபுணர் தினேஷ் குமார் தலைமையிலான குழுவினர் சோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர்.

ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற

முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு வயிறு வீக்கம், வயிற்றுக் கட்டி, குடலிறக்கம், பைல்ஸ், உடல் பருமன், மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

முகாமில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச மாத்திரை மருந்துகளை பெற்றுக் கொண்டனர்.

வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன், வி.எஸ்.கே.முருகேசன், சுபாஸ் தலைமை வகித்தனர். சொக்கராஜா முன்னிலை வகித்தார். ப்ளஸ்ஆல் அறக்கட்டளை நிறுவனர் பார்த்திபன், தர்ஷினி, குபேந்திரன் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment