by Vignesh Perumal on | 2025-04-26 04:47 PM
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக போலீசார் மற்றும் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.
வரும் ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. மே 10-ம் தேதி வரை 12 நாட்கள் இந்த திருவிழா நடைபெற இருக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் மே 8-ம் தேதியும், தேரோட்டம் மே 9-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வருகையினால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, திண்டுக்கல் நகர காவல் ஆய்வாளர் மற்றும் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் ஆகியோர் அபிராமி அம்மன் கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, திருவிழா நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்வது குறித்தும், வாகனங்களை நிறுத்துவதற்கான தற்காலிக இடங்களை கண்டறிவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், கோயில் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் தற்காலிக கடைகள் அமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில், திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி போக்குவரத்து சீராக நடைபெறவும், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!