| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

தவெக தலைவர் 'ரோடு ஷோ'...! உற்சாக வரவேற்பு...!

by Vignesh Perumal on | 2025-04-26 04:32 PM

Share:


தவெக தலைவர் 'ரோடு ஷோ'...! உற்சாக வரவேற்பு...!

கோவை பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய்க்கு கோவை விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த விஜயை வரவேற்க, விமான நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

விஜய் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், தொண்டர்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். பலர் கட்சி கொடிகளையும், மலர்களையும் தூவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். விஜய் திறந்த வாகனத்தில் நின்றபடி தொண்டர்களை நோக்கி கையசைத்து தனது நன்றியைத் தெரிவித்தார். விமான நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு தொண்டர்கள் அணிவகுத்து நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த வரவேற்பு காரணமாக விமான நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கொங்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி மற்றும் கரூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் பூத் கமிட்டி பணிகளை வலுப்படுத்துவது குறித்து விஜய் முக்கிய உரையாற்ற உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டர்களின் இந்த உற்சாக வரவேற்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி மாநாட்டிற்கு மேலும் வலு சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment