| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

புதிய பேருந்து சேவை தொடக்கம்...! பயனாளிகள் வரவேற்பு...!

by Vignesh Perumal on | 2025-04-26 12:23 PM

Share:


புதிய பேருந்து சேவை தொடக்கம்...! பயனாளிகள் வரவேற்பு...!

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் அக்கரைக்கு புதிய பேருந்து சேவைகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடி பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக அக்கரைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மற்றொரு புதிய பேருந்து சேவையும் இயக்கப்படவுள்ளது.

அதாவது, MAA1 (சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து முனையம்). 

இந்த வழித்தடத்தில் மொத்தம் 8 பேருந்துகள் இயக்கப்படும். ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியிலும் பேருந்துகள் புறப்படும். ஒரு நாளைக்கு 84 பயண நடைகள் மேற்கொள்ளப்படும். இந்த பேருந்துகள் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் மற்றும் வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சென்றடையும்.

MAA2 (சென்னை விமான நிலையம் - அக்கரை ECR சாலை).

இந்த வழித்தடத்தில் 7 பேருந்துகள் இயக்கப்படும். ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியிலும் பேருந்துகள் புறப்படும். ஒரு நாளைக்கு 35 பயண நடைகள் மேற்கொள்ளப்படும். இந்த பேருந்துகள் 200 அடி ரேடியல் சாலை, துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் வழியாக அக்கரை ECR சாலையை சென்றடையும்.

இந்த புதிய பேருந்து சேவைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) கிளாசிக் ரக பேருந்துகளாகும். இந்த சேவைகள் சென்னை விமான நிலையத்திற்கு வரும் மற்றும் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளுக்குச் செல்வோர் இதன் மூலம் எளிதாக பயணிக்க முடியும்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment