| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் Spiritual

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்...! என்ன சிறப்பு தெரியுமா...?

by Vignesh Perumal on | 2025-04-26 11:26 AM

Share:


நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்...! என்ன சிறப்பு தெரியுமா...?

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள உலகப் புகழ்பெற்ற சனீஸ்வரன் கோயிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சனி பகவான் வெள்ளி கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சனி பகவானை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று முதலே திருநள்ளாறில் வந்து குவிந்தனர். இன்று அதிகாலை முதலே பக்தர்கள் நள தீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சனி பகவானை தரிசனம் செய்தனர்.

சனி பகவான் வெள்ளி கவசத்தில் ஜொலித்த காட்சியைக் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பக்தர்களின் வருகை அதிகரித்ததால் திருநள்ளாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இன்று சனி பிரதோஷம் என்பதால் மேலும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருநள்ளாறு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment