| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

மாநகராட்சி அலுவலக மோசடி...! மேலும் இருவர் கைது...!

by Vignesh Perumal on | 2025-04-26 11:11 AM

Share:


மாநகராட்சி அலுவலக மோசடி...! மேலும் இருவர் கைது...!

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ₹4.69 கோடி மோசடி வழக்கில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மேலும் இருவரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் வரி வசூல் மைய இளநிலை உதவியாளர் சரவணன், கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஷ் மற்றும் நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மாவட்ட குற்றப்பிரிவு DSP குமரேசன் தலைமையிலான போலீசார் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மோசடி செய்த பணத்தில் சரவணனிடம் இருந்து தலா ₹30 லட்சம் பெற்றதாக திண்டுக்கல்லைச் சேர்ந்த இளஞ்செழியன் (வயது 35) மற்றும் சாணார்பட்டியைச் சேர்ந்த முரளி (வயது 41) ஆகிய இருவரை தற்போது கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளஞ்செழியன் மற்றும் முரளி ஆகியோர் இந்த மோசடி பணத்தில் சொத்துக்கள் வாங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தற்போது அந்த சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய இன்னும் சிலரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்த இந்த வழக்கில், தற்போது அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கைதுகள் மூலம், திண்டுக்கல் மாநகராட்சி மோசடி வழக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment