by Vignesh Perumal on | 2025-04-25 10:14 PM
ஆளுநர் விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க காரணமாக இருந்த நான்கு மூத்த வழக்கறிஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்து அளிக்க உள்ளார். இந்த விருந்து வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி சென்னையில் உள்ள கிண்டியில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்காக திறம்பட வாதாடிய மூத்த வழக்கறிஞர்களான முகுல் ரோத்தஹி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி மற்றும் வில்சன் ஆகியோரின் சட்ட ஆலோசனைகளையும், வாதத் திறமையையும் பாராட்டும் விதமாக இந்த தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நிலவி வந்த அதிகாரப் போட்டி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்களின் வாதங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டன.
இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒரு சட்டப்பூர்வமான சாதகம் கிடைத்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாகவும், அரசுக்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர்களை கவுரவிக்கும் விதமாகவும் முதலமைச்சரின் இந்த அழைப்பு அமைந்துள்ளது. வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த தேநீர் விருந்தில், வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!