by Vignesh Perumal on | 2025-04-25 03:14 PM
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பாகிஸ்தான் மற்றும் இந்திய அரசாங்கங்கள் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெளியிட்ட அறிக்கையில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில், "ஐ.நா. பொதுச்செயலாளர் நிலமையை மிகவும் உன்னிப்பாகவும், மிகுந்த கவலையுடனும் கண்காணித்து வருகிறார். நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் மற்றும் இந்திய அரசாங்கங்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்" என்று ஸ்டீபன் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "எந்தவொரு பிரச்சினையும் பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாக தீர்க்கப்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஐ.நா. பொதுச்செயலாளரின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வை எட்ட வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடு என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் நிலவி வரும் பதற்றமான சூழலின் பின்னணியில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபையின் இந்த வேண்டுகோளை இரு நாடுகளும் எவ்வாறு எடுத்துக்கொள்கின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!