by Vignesh Perumal on | 2025-04-25 02:53 PM
திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையாளர் யார் என்ற விவகாரம் மீண்டும் ஒரு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. தற்போதைய உரிமையாளராக இருக்கும் கவிதாவின் சகோதரர் நயன் சிங், இருட்டுக்கடை ஸ்தாபனம் தனக்கே சொந்தம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், மறைந்த பிஜிலி சிங் எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் இந்த ஸ்தாபனம் தனக்கு மட்டுமே உரியது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த உயிலில், ஜெயராம் சிங்கின் மகனான நயன் சிங்கிற்கு மட்டுமே இருட்டுக்கடை ஸ்தாபனம் பாத்தியப்பட்டது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உயிலை அடிப்படையாக வைத்து நயன் சிங், திருநெல்வேலியில் உள்ள 2வது மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார். பிஜிலி சிங் எழுதி வைத்த உயிலின்படி தனக்குத்தான் உரிமையுள்ளது என்பதை நீதிமன்றத்தின் மூலம் நிலைநாட்ட அவர் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளார்.
இருட்டுக்கடை உரிமம் தொடர்பான இந்த புதிய பிரச்சனை, ஏற்கனவே பல ஆண்டுகளாக நீடித்து வரும் சர்ச்சைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நயன் சிங் தாக்கல் செய்யவுள்ள வழக்கின் மூலம் இருட்டுக்கடை யாருக்கு சொந்தம் என்ற கேள்விக்கு ஒரு தெளிவான முடிவு கிடைக்குமா என்பது விரைவில் தெரியவரும்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!