by Vignesh Perumal on | 2025-04-25 02:30 PM
சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்க முடியாத தகுதியான பயனாளிகள் வரும் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் தற்போது 1 கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
முதல்வர் மேலும் கூறுகையில், "மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 9,000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
இந்த அறிவிப்பு, மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத தகுதியான பெண்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. ஜூன் மாதம் முதல் நடைபெற உள்ள முகாம்களில் அவர்கள் விண்ணப்பித்து இந்தத் திட்டத்தின் பயனைப் பெற முடியும். "மக்களுடன் முதல்வர்" திட்டம், அரசின் சேவைகள் மக்களை நேரடியாக சென்றடைய உதவும் ஒரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த முகாம்கள் எங்கு, எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியான பயனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!