by Vignesh Perumal on | 2025-04-25 02:21 PM
பந்திபோராவில் இன்று நடைபெற்ற என்கவுன்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் முன்னணி தளபதி அல்தாஃப் லல்லி கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவமும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் இணைந்து பந்திபோரா பகுதியில் இன்று காலை தேடுதல் வேட்டை நடத்தினர். குல்னார் அஜாஸ் பகுதியில் நடந்த இந்த தேடுதல் நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
இந்த என்கவுன்ட்டரில் லஷ்கர் இயக்கத்தின் முக்கிய தளபதியான அல்தாஃப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், இந்த மோதலில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்களும் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படைகள் தீவிரமாக பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர். இந்த என்கவுன்ட்டர் அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. கொல்லப்பட்ட அல்தாஃப் லல்லி, அந்த தாக்குதலில் தொடர்புடைய முக்கிய நபராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ராணுவ உயர் அதிகாரிகள் ஸ்ரீநகருக்கு விரைந்து சென்றுள்ளனர். அவர்கள், பந்திபோரா என்கவுன்ட்டர் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!