by Vignesh Perumal on | 2025-04-25 01:22 PM
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் உப கோயிலான மங்கலபள்ளி லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் இன்று (ஏப்ரல் 25, 2025) கோசாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி விழாவிற்கு தலைமை தாங்கினார்.
திமுக அவை தலைவர் காமாட்சி, திமுக நகர பொருளாளர் சரவணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் என திரளானோர் இந்த கோசாலை பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டனர்.
புதிதாக அமையவுள்ள இந்த கோசாலை கோயிலுக்கு வரும் பசுக்களை பராமரிக்கும் வகையில் கட்டப்பட உள்ளது. இந்த கோசாலை அமைவதன் மூலம் கோயிலின் சுற்றுச்சூழல் மேம்படும் என்றும், பசுக்களுக்கு பாதுகாப்பான இடமாக இது அமையும் என்றும் பக்தர்கள் தெரிவித்தனர். கோசாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!