by Vignesh Perumal on | 2025-04-25 12:52 PM
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த வழக்கில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியைச் சேர்ந்த அனிதா (28) என்பவர் தனது தாய் வீடான தேனி மாவட்டம் ஜி.கல்லுப்பட்டியில் வசித்து வருகிறார். அனிதாவுக்கும் அவரது வீட்டின் அருகே வசிக்கும் நந்தினி (24) மற்றும் லாவண்யா (24) ஆகியோருக்கும் இடையே நட்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 21-ம் தேதி அனிதா தனது குழந்தைகள், தோழிகள் லாவண்யா மற்றும் நந்தினியுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார். அங்கு ஒரு விடுதியில் அவர்கள் தங்கியிருந்தனர்.
அன்று இரவு, மங்கி குல்லா அணிந்தபடி கதவை தட்டிய ஒரு நபர், கத்தியை காட்டி மிரட்டி அனிதா மற்றும் அவரது தோழிகள் இருவரிடமிருந்து மொத்தம் 8 1/2 பவுன் நகைகளை பறித்துச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து அனிதா கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அனிதாவின் நகைகளை அபகரிக்க அவரது தோழிகளான நந்தினி மற்றும் லாவண்யா ஆகியோர் கட்டக்காமன்பட்டியைச் சேர்ந்த சாந்தகுமார் (22) என்பவரை தயார் செய்து திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
சம்பவம் நடந்த பிறகு, நந்தினியும் லாவண்யாவும் எதுவுமே தெரியாதது போல நடித்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, போலீசார் நந்தினி, லாவண்யா மற்றும் சாந்தகுமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 8 1/2 பவுன் நகைகளையும் போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களே துரோகம் செய்து நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!