| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Madurai

கஞ்சா வழக்கில் 12 ஆண்டு சிறை...! நீதிபதிக்கு கொலை மிரட்டல்...!

by Vignesh Perumal on | 2025-04-25 09:32 AM

Share:


கஞ்சா வழக்கில் 12 ஆண்டு சிறை...! நீதிபதிக்கு கொலை மிரட்டல்...!

மதுரையில் கடந்த 2024-ம் ஆண்டு கீரைத்துறை பகுதியில் 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டனர். நீதிபதிக்கு கொலை மிரட்டலும் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கீரைத்துறை போலீசார் கடந்த ஆண்டு பாண்டியராஜன் (23), பிரசாந்த் (22) மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா (20) ஆகியோரை 25 கிலோ கஞ்சா கடத்தியதாக கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹரிஹரகுமார் முன்பு நடைபெற்று வந்தது. நேற்று (ஏப்ரல் 24, 2025) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.

தீர்ப்பை கேட்டதும் ஆத்திரமடைந்த பாண்டியராஜனும் அவரது சகோதரர் பிரசாந்தும் நீதிமன்றத்தில் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தின் கண்ணாடிகளை உடைத்தனர். இதில் கண்ணாடிகள் உடைந்து அவர்களின் கைகளில் குத்தியதில் ரத்தம் வழிந்தது. அப்போது அவர்கள் நீதிபதியை நோக்கி, "நாங்கள் வெள்ளை காளியின் கூட்டாளிங்க… கிளாமர் காளி கொலையில் எதற்கு சுபாஷ் சந்திரபோசை என்கவுன்டர் செய்தீர்கள்? நாங்கள் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும், நீதிபதியை கொல்லாமல் விடமாட்டோம்" என்று மிரட்டல் விடுத்தனர்.

நீதிமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக பாண்டியராஜன் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவர் மீதும் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் கைதிகள் நீதிபதிக்கே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment