| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் Spiritual

இன்றைய கோபுர தரிசனம்...!

by Vignesh Perumal on | 2025-04-25 09:16 AM

Share:


இன்றைய கோபுர தரிசனம்...!

அருள்மிகு கோவிலூர் ஸ்ரீ கொற்றவாளீஸ்வரர் திருக்கோவில்

சிவகங்கை மாவட்டம் கோவிலூர் ஸ்ரீ கொற்றவாளீஸ்வரர் திருக்கோவில் காரைக்குடியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கோவிலூர் என்கிற ஊரிலே ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் உள்ளது. வீரசேகரபாண்டியன் என்கிற மன்னன் படையெடுத்து வந்த போது அவரது வாள் தொலைந்து போனது. பின்னர் மீண்டும் கிடைத்தது.

அந்த மன்னன் இந்த கோயிலைக் கட்டி ஸ்ரீ கொற்றவாளீஸ்வரர் சிவபெருமானைப் பிரதிஷ்டை செய்தார். அது சிவபெருமானுக்குக் கட்க பரமேஷ்வரர் என்கிற திருப்பெயரும் உள்ளது. இந்த கோயிலின் அன்னை ஸ்ரீ திருநெல்லை அம்மன். இந்த ஊரில் சிவகுப்தன் என்கிற பக்தர் தன் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். ஒருநாள் அவரின் மனைவி தன் மகளை நோக்கி வயலுக்குச் சென்று பறவைகளிடமிருந்து தானியங்களைக் காக்குமாறு சொன்னார்.

மதியம் வேலையில் காவல் காத்த மகளுக்குத் தயிர்ச் சாதம் கொடுத்தார் தாய். அவர் வீட்டிற்குத் திரும்பி வந்ததும் அந்த மகள் ஓடி வந்து மதிய உணவு கேட்டால் நான் தான் உணவு கொண்டு மகளுக்கு தயிர்ச்சாதம் கொடுத்தேனே அப்படி இருக்கும் பொழுது அவள் மீண்டும் ஓடி வந்து உணவைக் கேட்கிறாள் இது எப்படி என்று வியந்தார் அந்த தாய்.

வயலுக்குச் சென்று காவல் காக்குமாறு மகளிடம் சொன்னார் அந்த தாய். ஆனால் அந்த மகள் வயலுக்குச் செல்லாமல் தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அதை அறியாத அந்த தாய் வயலுக்கு தயிர்ச்சாதம் கொண்டு சென்ற பொழுது மகள் அங்கே இருந்திருக்கிறார். அது எப்படி தற்போது தான் சிவகுப்தனும்ம் அவர் மனைவியும் ஒரு உண்மையை உணர்ந்தார்கள்.

அது என்னவென்றால் கோவிலில் இருக்கும் அன்னை தெய்வம்தான் தங்களது வடிவிலே வந்த வயதிலேயே தானியங்களைக் காத்தார் என்கிற உண்மையை உணர்ந்தார்கள். அவர்கள் கோவிலுக்கு ஓடிச் சென்று அங்கே இருக்கும் அன்னையின் திரு வடிவைக் கண்டு வியந்துள்ளனர். அந்த அன்னையில் உதடுகளில் தயிர்ச்சாதம் ஒட்டி இருந்தது. தானியத்தைக் காத்த அந்த அன்னைக்கு திருநல்லை அம்பாள் என்கிற திருப்பெயர் வந்தது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment