by Vignesh Perumal on | 2025-04-24 09:36 PM
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் கோட்டம், அரியலூர் துணை மின் நிலையத்தில் இளமின் பொறியாளராக பணிபுரியும் இராஜேந்திரன் என்பவரின் ஓய்வூதிய தொடர்பான கோப்புகளை பரிந்துரைக்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய மேற்பார்வையாளர் செந்தில்குமார் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நிர்வாக மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த செந்தில்குமார், இளமின் பொறியாளர் இராஜேந்திரனின் ஓய்வூதிய கோப்புகளை பரிந்துரை செய்ய ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து இராஜேந்திரன் கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினர் இன்று (ஏப்ரல் 24, 2025) மேற்பார்வையாளர் அலுவலகத்தில் காத்திருந்தனர். அப்போது, செந்தில்குமார் இராஜேந்திரனிடம் இருந்து ரூ.10,000 லஞ்சப்பணம் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட செந்தில்குமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மின்வாரிய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் எச்சரித்துள்ளனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!