| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

இந்துக்களை கொன்று குவித்த பயங்கரவாதி...! மறந்து வருத்த நாடகம் ஆடும் அரசியல்...! இந்து எழுச்சி முன்னணி கண்டனம்...

by Vignesh Perumal on | 2025-04-24 03:35 PM

Share:


இந்துக்களை கொன்று குவித்த பயங்கரவாதி...! மறந்து வருத்த நாடகம் ஆடும் அரசியல்...! இந்து எழுச்சி முன்னணி கண்டனம்...

காஷ்மீரில் சமீபத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மனிதநேயத்துக்கும், பாதுகாப்புக்கும் எதிரான கொடூரமான தாக்குதல் என்றும், பயங்கரவாதி கைதியாக இருக்க, அவனை ஊக்குவிக்கும் நாடும் அவனது இயக்கமும் அனைவருக்கும் தெரியும் என்றும் தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் சில மத அமைப்புகளும், அவர்களை அரசியல் பலமாக பயன்படுத்தும் ஆளும் அரசும், இறந்த வீரர்களுக்காக உண்மை வருத்தம் தெரிவிப்பதை விட, மத்திய அரசை வசைபாடும் வேலையில் அதிக ஈடுபாடுடன் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

பயங்கரவாதியை கண்டிக்காமல், சுற்றுலாவிற்கு வந்த உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை அரசியல் செய்வது பாவச்செயல் என்று இந்து எழுச்சி முன்னணி கடுமையாக சாடியுள்ளது. நாட்டு பத்திரத்தையும், வீர மரியாதையையும் காப்பதற்காக அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் பதவியிலிருந்து விலகும் அளவுக்கு நேர்மை வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

நாட்டு எதிரிகளுக்கும், பயங்கரவாத ஆதரவு நாடுகளுக்கும் எதிராக சத்தமாக குரல் கொடுக்க வேண்டும் என்றும், இது போல நாடகம் ஆடுவதை நிறுத்த வேண்டும் என்றும் இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்டம் கேட்டுக்கொண்டுள்ளது. வீரர்களின் தியாகத்தை மதிக்க வேண்டும் என்றும், இந்துக்களின் புனிதத்திலும், தேசத்தின் பாதுகாப்பிலும் ஒரு பிச்சைக்கூழும் அரசியல் வேண்டாம் என்றும் அந்த அமைப்பு ஆவேசமாக தெரிவித்துள்ளது.

இந்த கண்டன அறிக்கையை இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர். காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment