by Vignesh Perumal on | 2025-04-24 02:48 PM
தேனியில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் அன்பின் சேவை அறக்கட்டளை இணைந்து "முப்பெரும் நிகழ்வு - 2025" என்ற கலை இலக்கிய நிகழ்வை (ஏப்ரல் 20, 2025) இன்டர்நேஷனல் ஹோட்டலில் சிறப்பாக நடத்தியது. குறிப்பாக, இன்று காலை 9:30 மணிக்கு எழிலரசன் பெரியவேடி இயக்கிய "பராரி" திரைப்படம் திரையிடப்பட்டது. திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் எழிலரசன் பெரியவேடியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அன்பின் சேவை அறக்கட்டளை சார்பாக பராரி திரைப்பட இயக்குனர் எழிலரசன் பெரியவேடி அவர்களுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது, நேர்மையான அரசுப்பணி செய்பவர்களுக்கு நேர்மை விருது, பொது மக்களுக்கு சேவை செய்பவர்களுக்கு சிறந்த சமூக சேவை விருது, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கலைச் சுடர் விருது என ஐம்பதுக்கும் மேலானவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மேலும் அவருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. முனைவர் பெரு.பழனிச்சாமி (மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்) வரவேற்புரை வழங்கினார். முனைவர் பெ. பச்சைமால் தலைமை தாங்கினார். MKM முத்துராமலிங்கம் (தலைவர், தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்கம்), கவிஞர். ஞானபாரதி (கௌரவத் தலைவர், த.க.இ.பெ - தேனி), சு.பிரபாகரன் (மாநிலக் குழு, த.க.இ.பெ - திண்டுக்கல்), மற்றும் சென்.கோவர்த்தனன் (மாவட்டப் பொருளாளர், த.க.இ.பெ - தேனி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழிலரசன் பெரியவேடி (இயக்குனர், பராரி திரைப்படம்) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அய். தமிழ்மணி (ஒருங்கிணைப்பாளர், மாநில திரை இயக்கம், தமுஎகச) திரைப்பட விமர்சனம் செய்தார்.
கி.பெருமாள் (மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேனி), வே.பரமேஸ்வரன் (மாவட்டத் துணைச் செயலாளர்), தமிழ் பெருமாள் (மாநில துணைத் தலைவர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், தேனி), மற்றும் C.பிரவீந்திரன் (மாவட்டச் செயலாளர், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக் கழகம், தேனி) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கவிஞர். கலப்பையன் ஜனகர், நாணயம் வே. சிதம்பரம் வீந்திரன், எழுத்தாளர். தேனி. சீருடையான், எழுத்தாளர். மோகன் குமாரமங்களம், பொறியாளர்.பொன்முடி, கவிஞர். ச.நா. இளங்குமரன், கவிஞர்.ராஜபிரபா, கவிஞர். கவிதா பால்ராஜ், கவிஞர். ராஜிலா ரிஜ்வான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கா.மணிமுத்து, க.தமிழ்வாணன், சு. மணிபாரதி மற்றும் பா.விக்னேஷ்பெருமாள் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். க.பழனிவேலு (மாவட்டத் துணைச் செயலாளர், த.க.இ.பெ. தேனி) நன்றியுரை கூறினார்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!