| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் DMK

2 வது சொத்து குவிப்பு வழக்கு - துரைமுருகன் விடுவிக்கப்பட்ட உத்தரவு - ரத்து !!..

by N S Boopalan on | 2025-04-24 01:00 PM

Share:


2 வது சொத்து குவிப்பு வழக்கு - துரைமுருகன் விடுவிக்கப்பட்ட உத்தரவு - ரத்து !!..

அமைச்சர் துரைமுருகனின் இரண்டாவது சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து பிறப்பிக்கட்ட உத்தரவையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

1.2007-2009 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.40 கோடி சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மற்றும் அவர் மனைவி மீதான வழக்கில், துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து 2017 ஆம் ஆண்டு வேலூர் நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. 

2.சொத்து குவிப்பு வழக்கில் இருந்து துரைமுருகனை விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை இன்று ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

3.துரைமுருகனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரித்த நிலையில் தற்போது அவரது விடுவிப்பை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

4.மேலும் வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் வேலூர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

5.துரைமுருகன் மற்றும் அவரது மனைவியின் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து உடனடியாக விசாரணையை துவங்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு. 

தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளின் தீர்ப்புகள் கடந்த இரண்டு நாட்களாக திமுக அமைச்சர்களுக்கு எதிராக வெளிவந்து கொண்டிருப்பதால் திமுகவிற்கு மிக பெரும் பின்னடைவாகவே இருக்கும் என சமூக ஆர்வலர்களும் அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment