| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை...!!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு....!!!

by Vignesh Perumal on | 2025-04-24 10:56 AM

Share:


தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை...!!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு....!!!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து குடும்ப நல நீதிமன்றங்களுக்கும் வரும் மே மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 15 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அல்லி வெளியிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் கோடை விடுமுறை காரணமாக நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கையை பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும் அனைத்து குடும்ப நல நீதிமன்றங்களும் மே 1, 2025 முதல் மே 15, 2025 வரை மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறை காலத்தில் அவசர வழக்குகள் எதுவும் விசாரிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 16ம் தேதி முதல் குடும்ப நல நீதிமன்றங்கள் வழக்கம்போல் செயல்படும்.

இந்த விடுமுறை அறிவிப்பு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கு கோடை வெப்பத்தில் இருந்து சற்று ஓய்வெடுக்கவும், புத்துணர்வு பெறவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று விடுமுறை அளித்தமைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment