by Satheesh on | 2025-04-20 07:03 PM
திமுகவை மட்டுமே நம்பி இல்லலை , தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும் - திருமாவளவன் : திமுகவை மட்டுமே நம்பி இருப்பதுபோல் தோற்றம் ஏற்படுத்துகிறார்கள். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும். அம்பேத்கரின் அரசமைப்பு சட்டத்தை நீர்த்து போக செய்கிறார்கள்; அதை வேடிக்கை பார்க்க முடியாது. திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச் சீட்டு விசிக தான். எந்த எதிர்பார்ப்புமின்றி கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் துணிவு, தெளிவு வேண்டும். எங்களது தொலைநோக்கு பார்வையை பொறுத்துக் கொள்ளாத அற்பர்கள் அவதூறு பரப்புகின்றனர் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.