by Vignesh Perumal on | 2025-04-19 02:36 PM
திண்டுக்கல் மாவட்டம். பழனி வட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டியில் விவசாயி திருமதி தமிழ்ச்செல்வி என்பவரது வேலன் இளம்புழு வளர்ப்பு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, அக்கரைப்பட்டியில் விவசாயி திருமதி கோ.நந்தினி என்பவரது அன்னை இளம்புழு வளர்ப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தும்பலப்பட்டியில் விவசாயி திருமதி நா.ஜோதீஸ்வரி என்பவரது தோட்டத்தில் மல்பெரி இரகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டார். பின்னர் தொப்பம்பட்டியில் விவசாயி திரு.அ.கோபால் என்பவரது தோட்டத்தில் மல்பெரி இரகம் நடவு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து நரிக்கல்பட்டியில் விவசாயி திரு.பெரியசாமி என்பவரது அன்னை இளம்புழு வளர்ப்பு மையத்தில் மல்பெரி இரகம் சாகுபடி. புழு வளர்ப்பு மனை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தொப்பம்பட்டியில் விவசாயி திரு.மு.பழனிச்சாமி என்பவரது வேலன் இளம்புழு வளர்ப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- "திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டு வளர்ச்சி துறையின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 2024-25 ஆம் ஆண்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
உயர் விளைச்சல் தரும் மல்பெரி நடவு திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.10,500 மானியத்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.25.83 இலட்சம் மானியத்தொகை பெறப்பட்டதில் ரூ.18.00 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைத்தல்(1200 ச.அடிக்கு மேல்) திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.1.20 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.72.00 இலட்சம் மானியத்தொகை பெறப்பட்டதில் ரூ.21.60 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய பகுதி திட்டம் சில்க் சமக்ரா((2.00 ஏக்கர்) 2023 24(பொது) திட்டத்தில் கிசான் நர்சரி அமைத்தல் திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.1,12,500 இலட்சம் மானியத்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.2.25 இலட்சம் மானியத்தொகை பெறப்பட்டதில் ரூ.2.25 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய பகுதி திட்டம் சில்க் சமக்ரா((2.00 ஏக்கர்) 2023 - 24(பொது) திட்டத்தில் உயர் விளைச்சல் தரும் மல்பெரி நடவு திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.90,000 மானியத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.75.60 இலட்சம் மானியத்தொகை பெறப்பட்டதில்
ரூ.75.60 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைத்தல் திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.3,37,500 மானியத்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.1.41 கோடி மானியத்தொகை பெறப்பட்டதில் ரூ.54.00 இலட்சம் மானியம் செலவிடப்பட்டுள்ளது.
மத்திய பகுதி திட்டம் சில்க் சமக்ரா((1.00 ஏக்கர்) 2023 - 24(பொது) திட்டத்தில் உயர் உளைச்சல் தரும் மல்பரி நடவு திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.45,000 மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.24.75 இலட்சம் மானியத்தொகை பெறப்பட்டதில் ரூ.20.25 இலட்சம் மானியம் செலவிடப்பட்டுள்ளது. தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை(1000 ச.அடிக்கு மேல்) அமைத்தல் திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.2.43 இலட்சம் மானியத்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.1.34 கோடி மானியத்தொகை பெறப்பட்டதில் ரூ.39.00 இலட்சம் மானியம் செலவிடப்பட்டுள்ளது.
மத்திய பகுதி திட்டம் சில்க் சமக்ரா((1.00 ஏக்கர்) 2023 24(பட்டியலினத்தோர்) திட்டத்தில் உயர்விளைச்சல் தரும் மல்பெரி நடவு திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.54,000 மானியத்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.3.24 இலட்சம் மானியத்தொகை பெறப்பட்டதில் ரூ.3.24 இலட்சம் மானியம் செலவிடப்பட்டுள்ளது. தனி பட்டுப்புழு வளர்ப்பு 10600601 அமைத்தல் திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.2.92 இலட்சம் மானியத்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.17.55 இலட்சம் மானியத்தொகை பெறப்பட்டதில் ரூ.5.85 இலட்சம் மானியம் செலவிடப்பட்டுள்ளது" என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
பட்டு வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் வாயிலாக பயனடைந்த பழனி வட்டம், தும்பலப்பட்டியைச் சேர்ந்த விவசாயி திரு.நாகராஜன் என்பவர் மனைவி திருமதி நா.ஜோதீஸ்வரி என்பவர் தெரிவித்ததாவது:-
நாங்கள் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் தோட்டத்தில் காய்கறி உட்பட பல்வேறு வேளாண் பொருட்களை சாகுபடி செய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் மல்பெரி இரகம் சாகுபடி செய்ய திட்டமிட்டோம். இதுதொடர்பாக பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்களை அணுகி விண்ணப்பித்தோம். அப்போது எங்களுக்கு ரூ.90,000 மானியம் கிடைத்தது. அதை வைத்து மல்பெரி சாகுபடி செய்துள்ளோம். தோட்டம் தற்போது நன்கு பராமரிக்கப்பட்டு பட்டுப்புழு வளர்ப்பு மனை கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் எங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என நம்புகிறோம். எங்களைப்போன்ற ஏழை விவசாயிகளுக்கு இதுபோன்ற மானியத் திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திரு.கணபதி மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்கள்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.