| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிடும் அதிகாரம்...! உச்ச நீதிமன்றத்திற்கு உண்டா...?

by Vignesh Perumal on | 2025-04-19 11:29 AM

Share:


குடியரசுத் தலைவருக்கு உத்தரவிடும் அதிகாரம்...! உச்ச நீதிமன்றத்திற்கு உண்டா...?

தமிழக மசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் இந்தியக் குடியரசு தலைவர் அவர்களுக்கே உத்தரவு பிறப்பித்துள்ளது. 

என்னை கேட்டால் இந்த மாதிரியான சங்கடங்களுக்கு முன்பாகக் குடியரசு தலைவர் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு உச்சநீதிமன்றம் சில ரெஃப்ரென்ஸ்களை வழங்கி இருக்கலாம். இதன் இதன் அடிப்படையில் அம்மசோதாக்களை ஜனாதிபதி அவர்கள் நிறைவேற்றித் தருவதற்கு வழிவகைகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அதை அறிவுறுத்தி இருக்கலாம்! அதை விட்டுவிட்டு எதற்கு இந்த தீர்ப்பு என்று புரியவில்லை! 

நமக்குத் தெரியும்! ஜனாதிபதி அவர்களை அனைத்து நீதிமன்றங்களுக்கும் அப்பால் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு தீர்மானங்களுக்கு அடியிலும் அவரை விமர்சிக்கக் கூடாது. அதே அடிப்படையில் தான் உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் அவர்களின் தீர்ப்புகளையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க முடியாது. இந்தியக் கான்ஸ்டிடியூஷன் அடிப்படையில் இது பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்ட சாசன விதிகள்!

ஜனநாயகம் என்பது நீதித்துறை நாடாளுமன்றம் ஆட்சியாளர்கள் மூன்றும் இணைந்த ஒரு ஜனநாயகப் பூர்வமான நிர்வாக அமைப்பு. இவை மூன்றும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும் போதுதான் தேச நலன்களுக்குரிய விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று மேண்டஸ்கி என்ற பிரெஞ்ச் அறிஞர் குறிப்பிடுகிறார்! இவை மூன்றும் “ஸெப்ரரேசன் ஆப் த பவர்” Separation of powers என்கிற முறையில் இணைந்திருக்கின்றன.

குடியரசு முறையாக இருந்தாலும் நாடாளுமன்ற ஜனநாயகம் என்றாலும் இந்த முறை பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்த நிலையில் இருந்து விலகி ஏனோ இந்த மசோதாக்கள் விவகாரத்தில் வினோதமாக இந்தத் தீர்ப்பை நீதிபதிகள் கொடுத்துள்ளார்கள்.

“ம்யூச்சுவல் செக்சன் பேலன்ஸ்”என்கிற முறையில் The doctrine of checks and balances states that each organ of the government shall act on the other organs in such a way as to prevent them from becoming totalitarian and to prompt them towards fulfilling their constitutional obligations.

மேற் சொன்ன மூன்று அமைப்பின் எல்லைகளையும் மீறாமல் எந்த காரியம் ஆயினும் அந்தந்த தேசங்களில் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் உலகம் முழுக்க ஒத்துக் கொண்டிருக்கிற ஜனநாயகத்தின் பண்பு! அதை ஒட்டித்தான் இந்த மசோதா விவகாரத்திலும் நடந்திருக்க வேண்டும். அரசியல் சாசனமும் இதைத்தான் மறைமுகமாகச் சொல்லுகிறது. 

1951இல் யாருக்கு அதிக அதிகாரம் குடியரசு தலைவருக்கா? இல்லை பிரதமரைத் தலைமையாகக்கொண்டு செயல்படும் மத்திய அமைச்சரவைக்கா? என்று இந்துமத சட்டங்களின் அடிப்படையில் கேள்விகள் எழும்பி வழக்காக மாறின. அன்றைக்கு செட்ல் வாட், சட்ட ஆளுமை கொண்ட இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் இதற்காக வாதாடினார்!

அது விவாதமாக மாறி இந்திய உச்ச நீதிமன்றக் கருத்தாய்வு மன்றத்தில் பேசப்பட்டது. அதற்குப் பிறகு பல்வேறு ஐம்பதுக்கு மேற்பட்ட விவாதங்கள் தீர்ப்புகள் என்று இந்த பிரச்சனையில் தொடர்ந்து வழக்குகள் நடந்தன! 

கேசவநந்த பாரதி வழக்கு அதேபோல் மினர்வா மில் மேனகா காந்தி கோலகநாத் SR Bommai case

Judges cases etc போன்ற சம்பந்தப்பட்ட வழக்குகளும் நடந்தன. இப்படியான வழக்குகளைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் பலமுறை இவற்றைப் பேசி உள்ளது! அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழக்குகளில் மிகச் சரியாக நடந்துள்ளதா என்பதும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகத்தான் இன்னும் இருக்கிறது.

பகல்பூர் வழக்கில் அரசின் கொள்கை முடிவுகளை 1980ல் உச்சநீதிமன்றம் தன் வசமாக்கியது. மீண்டும் சொல்வது என்னவெனில் உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை யாரும் விமர்சிக்கக் கூடாது! முடியாது! ஆனால் சில கருத்துக்களை ஜனநாயக ரீதியாக முன் வைப்பது தவறில்லை. அந்த வகையில் இந்தத் தீர்ப்பு என்பது 100% சரியானதுதானா என்பதுமே இன்னும் ஆரோக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் தான்!

இந்தத் தீர்ப்பை வைத்துக் கொண்டு ஏதோ திமுக காரர்கள் நாங்கள் எதையோ சாதித்து விட்டோம் என்று

ஆர்ப்பாட்டம் செய்வதெல்லாம் விளம்பரத்துக்கு தான் பயன்படுமே ஒழிய வேறொன்றுக்கும் ஆகாது!

நீதிபதிகளின் முழு தீர்ப்பையும் வாசித்த பிறகு தான் இது பற்றிச் சொல்ல முடியும்!

நீதிமன்றங்கள் விசாலமாக செயல்படுவதற்கு மட்டுமே அரசியலமைப்பு சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் அது மத்திய அரசையோ மாநில அரசையோ நிர்வகிக்கக்கூடிய பொறுப்பை அரசியலமைப்பு சட்டம் வழங்கவில்லை என நினைத்து விட முடியாது. குடியரசு தலைவர், ஆளுநர் மீது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடர முனபு அனுமதியே கடந்த 2000 வரை தரவில்லை என நினைவு. பிரிவு 226 இன்படி ரிட் மனு வழக்கு எண்கூட வழங்க court section இல் சிரமப்படுவர்கள்.

அரசு நிர்வாகம், முதல் முறையாக கேரள கவர்னர் மூலம் சம்மட்டி அடி தந்திருக்கிறது.

நீதிமன்றம் என்பது சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படியே நடந்து கொள்ள வேண்டும். தங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைத்துக் கொண்டு நடந்து கொள்ளக் கூடாது.

சிறை தண்டனை பெற்றவர்களுக்கு மந்திரி பதவி தரச் சொல்லி கட்டாயப் படுத்துவதும், ஊழல் வழக்குகளை கண்டு கொள்ளாமல் கால விரயம் செய்து கடத்துவதும் அவர்களின் வேலையாகி பொதுமக்கள் சிரிக்கும்படி ஆகிவிட்டது. இப்போது கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் கட்டளை இடுவதுடன் சட்டமும் இயற்ற ஆரம்பித்து விட்டது!

ஒரு நல்ல சட்டத்தை அமல்படுத்த ஆனானப்பட்ட ஆளும் கட்சியே பெரும்பான்மை இருந்தும், நாக்கு தள்ள வேண்டிய நிலையில், பல நாட்கள் இரு அவைகளிலும் வாதிட வேண்டிய நிலையில், இவர்கள் ஹாயாக உட்கார்ந்து கொண்டு தங்கள் மனம் போல கட்டளைகள் இட்டுக் கொண்டு இருப்பது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக மாற்றிவிடும்.

அப்புறம் ஒரு அரசை மக்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? நீதிமன்றங்களே அரசாளலாமே? மிகச்சரியாக கூறியிருக்கிறார் கேரள கவர்னர். இது மிகவும் ஆபத்தான போக்கு இதற்குக் கடிவாளம் போட வேண்டிய மத்திய அரசு தூங்கிக் கொண்டு இருக்கிறது! எவன் அதிகாரத்தையோ எவனோ எடுத்துக்கறான் நமக்கு என்ன?" என்ற பாணியில்!

கவர்னருக்கு கட்டளை இட்டு இப்போது ஜனாதிபதிக்கும் கட்டளை இட்டாகிவிட்டது. இப்போதுதான் மத்திய அரசு தூங்கி எழுந்து தமிழக கவர்னர் பற்றிய தீர்ப்பிற்கு மேல் முறையீடு செய்கிறது.! அதற்குள் ஜனாதிபதிக்கே கட்டளை போட்டாகிவிட்டது என்று அரசியலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கூறியுள்ளார்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment