by Vignesh Perumal on | 2025-04-19 09:48 AM
நேற்று (ஏப்ரல் 18) திருமலையில் திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு வசதிகள் குறித்து நேரில் கேட்டறிந்தார்.
பி.ஆர்.நாயுடு முதலில் கல்யாணகட்ட மற்றும் நந்தகம் மினி கல்யாணகட்ட ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் முறைகளை பார்வையிட்டார். பின்னர், அங்குள்ள பணியாளர்களிடம் பக்தர்களுக்கு எவ்வித குறைபாடும் இன்றி சேவைகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தொடர்ந்து, பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், அதிக கூட்டம் இருக்கும் கல்யாணகட்டாக்களில் இருந்து குறைவான கூட்டம் உள்ள கல்யாணகட்டாக்களுக்கு பக்தர்களை வழிநடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், அனைத்து இடங்களிலும் தூய்மையை பேணிக்காக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, தேவஸ்தான போர்டு உறுப்பினர்கள் சாந்தா ராம் மற்றும் நரேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தலைவர் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.