| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

திருச்செந்தூரில் தரமற்ற பணி.... இந்து எழுச்சி முன்னணிப் புகார்...!!!

by Muthukamatchi on | 2025-04-18 03:11 PM

Share:


திருச்செந்தூரில் தரமற்ற பணி.... இந்து எழுச்சி முன்னணிப் புகார்...!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பாதையில் நடைபெறும் தரமற்ற கட்டிடப்பணி – ஹிந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்டம் கண்டனம் தெரிவிக்கிறது!திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் புனித வழியில் தற்போது நடைப்பெறும் கட்டிடப்பணிகள், மிகவும் திகைக்கும் வகையில் தரமற்ற முறையில் நடைபெற்று வருகின்றன.

பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் செல்வது மற்றும் இந்த பாதையின் புனிதத்தன்மை என்பதை புறக்கணித்து, நிர்வாகம் மற்றும் பொறுப்பாளர்கள் கவனக்குறைவாக செயல்படுவதே வேதனைக்குரியது.புகைப்படங்களில் காணப்படும் அளவுக்கு பாதுகாப்பு சுவரோ, சரியான கட்டுமான முறையோ இல்லாமல், ராடுகள் வெளியில் வைக்கப்பட்டுள்ளன. செங்கல் மற்றும் கற்கள் சீரற்ற முறையில் வீசப்பட்டுள்ளன. இது எப்போது வேண்டுமானாலும் விபத்துக்கு வழிவகுக்கும் அபாயகரமான சூழலை உருவாக்கியுள்ளது.இது போன்ற கட்டிடப்பணிகள்:பக்தர்களின் உயிர் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகின்றன.கோவிலின் மதிப்பையும், புனிதத்தையும் சீரழிக்கின்றன.அரசு மற்றும் இந்து அறநிலையத் துறை சீர்திருத்த நடவடிக்கைக்கு அக்கறையின்மையையும் வெளிப்படுத்துகின்றன.இதையடுத்து, ஹிந்து எழுச்சி முன்னணி – தேனி மாவட்டம் மிகக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறது.


எந்தவொரு கட்டுமானமும்:முறையான அனுமதியுடன்,பிளான் மற்றும் தரச்சான்றுகளுடன்,தகுந்த பொறியாளர்களின் மேற்பார்வையில்மட்டுமே நடைபெற வேண்டும்.இது தொடர்பாக உரிய புகார் மனு அறநிலையத் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பப்படும்.பக்தர்களின் பாதுகாப்பும், இந்து மரபுகளின் மதிப்பும் எங்களுக்குப் பிரதானம். அதை யாராலும் கேள்விக்குள்ளாக்க முடியாது.இது எச்சரிக்கை – தரமற்ற கட்டுமானம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்!

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment