| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

இயேசு கிறிஸ்துவைப் போன்று பரந்த மனப்பான்மை....! பிரதமர் மோடி...!

by Vignesh Perumal on | 2025-04-18 12:00 PM

Share:


இயேசு கிறிஸ்துவைப் போன்று பரந்த மனப்பான்மை....! பிரதமர் மோடி...!

பிரதமர் நரேந்திர மோடி புனித வெள்ளியை முன்னிட்டு தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "புனித வெள்ளியன்று இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்வோம். புனித வெள்ளியானது இயேசு கிறிஸ்துவின் இரக்கம் மற்றும் கருணையைப் போற்றுகிறது. இயேசு கிறிஸ்துவைப் போன்று பரந்த மனப்பான்மையுடன் செயல்படவும் புனித வெள்ளி வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த வாழ்த்துச் செய்தி, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தையும், கருணையையும், பரந்த மனப்பான்மையையும் நினைவுபடுத்துவதோடு, அந்த விழுமியங்களை பின்பற்றி நடப்பதற்கு ஊக்கமளிப்பதாகவும் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் இன்று புனித வெள்ளியை அனுசரித்து வரும் நிலையில், பிரதமரின் இந்த செய்தி அவர்களுக்கு நம்பிக்கையையும், அமைதியையும் அளிப்பதாக உள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment