by Vignesh Perumal on | 2025-04-18 10:48 AM
18 வயதுக்குட்பட்ட உங்கள் பிள்ளைகளுக்கு வாகனம் வாங்கித் தருகிறீர்களா அல்லது ஓட்ட அனுமதிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது.
18 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் ஓட்டவோ அல்லது வாங்கிக் கொடுக்கவோ செய்யும் பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த ஒரு வழக்கு விசாரணையின்போது, 18 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவன் ஓட்டிய வாகனம் விபத்துக்குள்ளானதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, நீதிபதி அவர்கள் கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: "இந்நீதிமன்றத்தில் STC 111/2024(MPC 10/2024) என்ற வழக்கில் திரு.காசிம் த/பெ. பிரான்மலை என்பவர். 18 வயது பூர்த்தி அடையாத இளவர் ஒருவருக்கு தனது KTM Duke TN 63 CW 5215 என்ற இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு கொடுத்த குற்றத்திற்காக.
காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தால் sec.199(A) & 129 MV Act -ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் இளவருக்கு திரு. காசிம் என்பவர் இருசக்கர வாகனத்தை இயக்குவதற்காக கொடுத்துள்ள குற்றமானது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு இந்நீதிமன்றம் ரூ,26,000/- அபராதமும் மற்றும் 12 மாத காலத்திற்கு இந்த இரு சக்கர வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைக்கவேண்டும் (To be suspended) என்று இன்று (02.02.2024) உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அபராதத் தொகையை காசிம் த-பெ. பிரான்மலை என்பவர் இந்நீதிமன்றத்தில் செலுத்திவிட்டார். எனவே 12 மாத காலத்திற்கு மேற்படி இருசக்கர வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைக்கவேண்டும் எனவும் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199(A)ன் கீழ் உத்தரவிடப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.