by Vignesh Perumal on | 2025-04-18 08:00 AM
பெண்கள் குறித்து அமைச்சர் பொன்முடி அவதூறாக பேசிய புகாரில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பெண்களையும், சைவம், வைணவத்தையும் இழிவுபடுத்தும் வகையில், ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரது அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால், தி.மு.க., தலைமை, பொன்முடியை கட்சிப்பதவியில் இருந்து மட்டும் நீக்கியது; அவர் இன்னமும் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது, வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. அமைச்சரின் அவதூறு பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது; புகார் இல்லாமலேயே காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். "எத்தனை புகார்கள் வந்தாலும் அமைச்சர் பொன்முடி மீது ஒரே வழக்காக பதிவு செய்யுங்கள்; நான்கு, ஐந்து வழக்குகள் பதிவு செய்தால் நீர்த்துப்போய்விடும்" என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை வழங்கியுள்ளார். பெண்கள் குறித்து அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையான நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.