by Vignesh Perumal on | 2025-04-18 07:44 AM
இன்றைய கோபுர தரிசனம்...!
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
மூலவர்: அதிதீஸ்வரர்
அம்மன்/ தாயார்: பெரியநாயகி பிரகன்நாயகி
தலவிருட்சம்: அகண்ட வில்வமரம்
தீர்த்தம்: சிவ தீர்த்தம்
புராண பெயர்: வாணியம்மைபாடி
ஊர்: வாணியம்பாடி
மாவட்டம்: வேலூர்
திருவிழா: சித்திரை பிரமோற்சவம், மகா சிவராத்திரி, திருவாதிரை
தல சிறப்பு: இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்துள்ளார்
பொது தகவல்: இக்கோயில் பல்லவ பேரரசுகளால் கட்டப்பட்டது மூன்று நிலை மேற்கு ராஜகோபுரமும் ஐந்து நிலை கிழக்கு ராஜகோபுரமும் உள்ளது சிவன் மேற்கு நோக்கியும் சரஸ்வதி கிழக்கு நோக்கியும் உள்ளது சிறப்பு
பிரார்த்தனை: புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் திக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்: பால், தேன், நதிநீர் அன்னம் ஆகியவற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது..