by Vignesh Perumal on | 2025-04-17 05:02 PM
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பான விசாரணையை இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த விவகாரம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில், இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை தேர்தல் ஆணையத்தில் முன்வைத்துள்ளனர்.