by admin on | 2025-01-24 08:41 PM
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பேரூராட்சி கட்டிடத்தில் எம்ஜிஆர் கூட்ட அரங்கு என்ற பெயரை மறைத்து தமிழ் வாழ்க என்ற ஒளிரும் போர்டு வைத்ததை கண்டித்து பி எஸ் மனோகரன் தலைமையில் அப்பிபட்டி கண்ணன்,கள்ளபட்டி பெருமாள் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது,தமிழ் வாழ்க என்ற போர்டு அகற்றும் வரை இந்த முற்றுகை போராட்டம் தொடரும் என எம் ஜி ஆர் விசுவாசிகள் தெரிவித்தனர்.கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் போர்டு வைத்தவர்களே நாளை சனிக்கிழமை எடுத்து விடுவார்கள் என உறுதி கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது