by satheesh on | 2026-07-08 03:32 PM
திண்டுக்கல் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் , கோமங்கலம்புதூர் அருகில் புதியதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி நாளைய தினம் (08/07/2026) முதல் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்படி சுங்கச்சாவடியில் விதிக்கப்பட்டிருந்த கட்டணங்கள் பொதுமக்களை பாதிக்கும் வகையில் இருந்த காரணத்தினால் அனைத்து பொதுமக்களும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, நமது நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.ஈஸ்வரசாமி அவர்கள் மற்றும் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.ஜெயக்குமார் அவர்கள் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலையின் திட்ட இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து நாளைய தினம் நடைமுறைப்படுத்த இருந்த சுங்கச்சாவடியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள்,அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி அந்த சுங்கச்சாவடி கட்டணங்களை குறைத்து நிர்ணயம் செய்த பின்பு , இந்த சுங்கச்சாவடி திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.இதனை தொடர்ந்து ,நாளைய தினம் (08/07/2026)செயல்பட இருந்த சுங்கச்சாவடி-யானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் இல்லங்களில் மரக்கன்றுகள் நடவு....!!!!
திருப்பூர் கோபுரம் பவுண்டேஷன் அறக்கட்டளையின் சேவையை பாராட்டி கலெக்டர் நற்சான்று....!!!
தமிழ்நாடு ரோல் பால் ஸ்கேட்டிங் ஜூனியர் போட்டி திருச்சியில் துவங்கியது....!!!
தேனியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்....!!!"
சிவகங்கை கலெக்டர் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்...!!! நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!