| | | | | | | | | | | | | | | | | | |
வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு

குரூப் 2, 2ஏ தேர்வு...! நடத்த முடியாத ஆட்சி...! எடப்பாடி கடும் கண்டனம்...!

by Vignesh Perumal on | 2026-02-08 04:46 PM

Share:


குரூப் 2, 2ஏ தேர்வு...! நடத்த முடியாத ஆட்சி...! எடப்பாடி கடும் கண்டனம்...!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று (பிப்ரவரி 8, 2026) நடத்தவிருந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள், நிர்வாகக் குளறுபடிகள் காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாகத் திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநில அரசை வன்மையாகக் கண்டித்துப் பேசியுள்ளார்.

இன்று காலை 9,000-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்கவிருந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் தொடங்கவிருந்த நிலையில், பல மையங்களில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டன.

சென்னையில் உள்ள அரும்பாக்கம் மற்றும் நந்தனம் தேர்வு மையங்களில், தேர்வர்களின் ஹால் டிக்கெட்டில் இருந்த பதிவு எண்களும், மையத்தில் ஒட்டப்பட்டிருந்த இருக்கை எண்களும் பொருந்தவில்லை.

பல தேர்வர்களுக்குத் தேர்வு எழுத வேண்டிய அறைகளோ அல்லது இருக்கை எண்களோ ஒதுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சில மையங்களில் தேர்வு தொடங்கி ஒரு மணி நேரம் கழித்துப் குளறுபடி தெரிந்ததால், அதிகாரிகள் தேர்வினை பாதியிலேயே நிறுத்தினர்.

குழப்பங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தலைவர் இந்தத் தேர்வை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

மென்பொருள் தொடர்பான தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சுமார் 600-க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்குத் தவறான மையங்கள் மற்றும் பதிவு எண்கள் ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்வுத் தேதி மற்றும் திருத்தப்பட்ட ஹால் டிக்கெட்டுகள் குறித்த அறிவிப்பு அடுத்த 15 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும், தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் (SMS) மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார்.

குறிப்பாக, "ஒரு போட்டித் தேர்வைக்கூட முறையாக நடத்தத் தெரியாத நிர்வாகத் திறனற்ற அரசாக திமுக அரசு உள்ளது. தமிழக வரலாற்றிலேயே குரூப் 2 தேர்வு இப்படி பாதியிலேயே ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை.

மேலும் அவர் கூறியதாவது: 'திமுக ஆட்சியில் புதிய தொழிற்சாலைகளும், மத்திய அரசின் திட்டங்களும் தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றன.

பல மாதங்களாகக் கடினமாக உழைத்துப் படித்து, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து வந்த ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்துடன் இந்த அரசு விளையாடுகிறது.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தன்னாட்சித் தன்மையைச் சீர்குலைத்து, தேர்வாணையத்தை ஒரு முடங்கிப்போன அமைப்பாக மாற்றியதே இந்த ஆட்சியின் சாதனை என அவர் விமர்சித்தார்.

"அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்யாதது மிகப்பெரிய அலட்சியம். இதற்குத் தேர்வாணையத்தின் உயர் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திமுக அரசின் குளறுபடியால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்" எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment